அதிமுக -பாமக கூட்டணி: ஒப்பந்தத்தில் 10 கோரிக்கைகளை பாமக முன்வைத்துள்ளது

மக்களவை தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், கூட்டணி ஒப்பந்தத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை பாமக முன்வைத்துள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.கூட்டணி ஒப்பந்தத்தில் 10 கோரிக்கைகளை பாமக முன்வைத்துள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் கோரியுள்ளது.

கோதாவரி உள்ளிட்ட 20 நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கோரப்பட்டுள்ளது.

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

500 மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

படிப்படியாக மணல் குவாரிகளை மூட வேண்டும் என்றும் பாமக சார்பில் கூட்டணி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் சதி முறியடிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பொதுத்துறை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்றும் அதிமுகவுடனான பாமகவின் கூட்டணி ஒப்பந்தத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Exit mobile version