வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் என்று கேள்வி நேரத்தில் பேசிய வேதாரண்யம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன்,

வேதாரண்யத்தில் லட்சக்கணக்கான டன் உப்பு உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்புக்கள் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பிரிக்கப்படுகிறது. மேலும் உப்பிலிருந்து 67 மூலப் பொருட்கள் எடுக்கப்படுகிறது. வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் பிளாஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைத்தால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் பிளாஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மீண்டும் அப்பணித் துவங்கி பிளாஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். மேலும் கடல் நீரில் இருந்து உப்பு எடுக்கப்படுவதால் மழை நீரை விட சுத்தமான  நீர் கிடைக்கும். இதையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version