“முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும்” என்று நிரூபித்தவர் பன்னீர்செல்வம் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள தைரியம் இல்லாத துரோகி பன்னீர்செல்வம், தனிமனித தாக்குதலில் ஈடுபட்டால் கழக தொண்டர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவியின் மறைவுக்கு பின் பன்னீர் செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடும் “முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும்” என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் பரம்பரை எதிரி தீயசக்தி திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி பன்னீர், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து விரக்தியின் உச்சியில் உளறி உள்ளதாக சாடி உள்ளார். இயக்கத்தை திமுகவிடம் அடகு வைக்கவும் தனித்தன்மையை சீர்குலைக்கவும் முயன்ற ஜீரோ பன்னீரிடம் இருந்து, கழகத்தை மீட்டெடுத்து கட்டிக்காப்பாற்றி, கழகத்தின் பெருமையை காத்தவர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Cannot join PM Modi Cabinet as 'uninvited guest': AIADMK minister D  Jayakumar | India News,The Indian Express

சட்டமன்றத்தில் அதிமுக அரசை எதிர்த்து வாக்களித்து துரோகம் செய்த பின், பதவி சுகத்திற்காக தேடிவந்த பன்னீரை, துணைமுதல்வராகவும், கழக ஒருங்கிணைப்பாளராகவும், ஆக்கியவர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உடனிருந்தே தொல்லை கொடுக்கும் வியாதிபோல், பல்வேறு துரோக செயல்களில் ஈடுபட்டதையும் பொறுத்துக்கொண்டவர் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டுள்ளார். சுயநலவாதி பன்னீர் திருந்துவார் என காத்திருந்த நிலையில், மகனை, விடியா அரசின் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வைத்து, பாராட்டு பத்திரம் படிக்க வைத்து, சரணாகதி அடைந்ததை அறிந்த பின்புதான், புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டிக்காக்கும் நடவடிக்கைகளில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஈடுபட்டதை நினைவுகூர்ந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தீய சக்தி திமுக எதிர்ப்பு” என்ற தொப்புள் கொடி கொள்கையை சீர்குலைக்க, சுயநலவாதி பன்னீர் முயன்றதை உணர்ந்ததால்தான், ஒட்டுமொத்த இயக்கமும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பின்னால் அணிவகுத்து நின்றதாக தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கில் 360 கோடியை கொட்டி, மக்களை பட்டியில் அடைத்து தட்டிப்பறித்த வெற்றியை, துரோகி பன்னீர் கொண்டாடுவது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள அவர், அதிமுக நடத்திய புனித வேள்வியில், தர்மம் காக்க, உண்மை தொண்டர்களின் துணையுடன் களமாடிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீதும் கழகம் மீதும் அசைக்க முடியாத பற்றுகொண்ட 44 ஆயிரம் பேர் வாக்களித்துதான் உண்மையான வெற்றி என குறிப்பிட்டுள்ளார். தனது அரசியல் வாழ்வு இப்படி சூனியமாகிவிட்டதே என்ற ஆற்றாமையில் பித்துக்குளிபோல் பன்னீர் உளற துவங்கி உள்ளதாகவும் ஆனால், பன்னீர் பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட இடைக்கால பொதுச்செயலாளர் தெரிவித்தது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கில் முறையாக ஒரு வேட்பாளரை கூட நிறுத்த முடியாத காகித புலியான பன்னீர், அவரே குற்றம்சாட்டப்பட்ட சசிகலா வகையறாவையும் சேர்த்தால்தான் இயக்கம் வலுப்பெறும் என்ற மாய விதையை விதைக்க தொடர்ந்து முயன்று வருவதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். பன்னீருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் தகுதி, திறமை இருந்தால் தனிக்கடை துவங்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் அரசியல் ரீதியாக மோதிப்பார்க்கட்டும் , அதை விடுத்து தனிமனித தாக்குதலில் ஈடுபட்டால் கைகட்டி வேடிக்கை பார்க்க, கழக தொண்டர்கள் கோழைகள் அல்ல என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை அழிக்க நினைக்கும் பன்னீரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரது ஆன்மா என்றுமே மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version