கடந்த 1989ஆம் ஆண்டு சட்டசபையில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை மறைத்து, மீண்டும் எம்பி சீட்டுக்காக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் செயலில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார். விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மாணவர்கள் மத்தியில் சாதிய மோதல் தலைதூக்கி உள்ளதாக குற்றச்சாட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் மீண்டும் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிகழும் நீட் தற்கொலைகளுக்கு முழுக்க முழுக்க விடியா திமுகவே காரணம் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்ற வாக்குறுதி என்னவானது? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், குடும்ப நலனுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் திமுக, தமிழக நலனுக்காகவோ உரிமைக்காகவோ எந்த குரலும் கொடுக்கவில்லை என விமர்சித்துள்ளார். ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்தது அதிமுக தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சாதிய மோதல்கள், கத்தி, கஞ்சா, கூஜா
வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விடுவதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்
குற்றம் சாட்டியுள்ளார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி
மாணவர்களுக்கு நேர்ந்துள்ள சம்பவம் மிகவும் வேதனைக்குரிய ஒன்று என்ற அவர்,
தென் மாவட்டங்களில் இது போல் நடைபெறும் சாதியை தாக்குதல்கள் அதிமுக ஆட்சியில் ஒருபோதும் நடந்ததில்லை என கூறினார். அதிமுக ஆட்சியில் சிறு தாக்குதல்கள் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறிய முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுக ஆட்சியில் சாதிய மோதல்கள் நடைபெற்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்காததால்தான் தொடர் நிகழ்வுகள் இதுபோல் நடப்பதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக திமுக ஆட்சியில் தான் தென் மாவட்டங்களில் அதிக அளவில் சாதிய தாக்குதல்களும், மோதல்களும் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கத்தி, கஞ்சா, கூஜா வெடிகுண்டு கலாச்சாரம்
அதிகரித்துவிடுவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
நீட் என்ற தடுப்பு சுவர் இன்னும் சில நாட்களில் இடிந்து விழும் என்ற தமிழக
முதலமைச்சரின் அறிக்கை குறித்து பதிலளித்த டி. ஜெயக்குமார், நாடாளுமன்றத்
தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இது போன்ற ஒரு அறிவிப்பை தமிழக முதலமைச்சர்வெளியிட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்இருந்து கொண்டு நீட் தேர்வை கொண்டு வரும் வரை அமைதியாக இருந்துவிட்டு, தற்போது அவற்றை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார்கள் திமுகவினர் எனவும் குற்றம் சாட்டினார். 69% இட ஒதுக்கீடு கொண்டுவர முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சித்த பொழுது, மண்டல் ஆணையம் 50 விழுக்காடுக்கு மட்டுமே அனுமதி கொடுத்ததாகவும், ஆனால் சட்ட ரீதியாக போராடி 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது தான் அதிமுகவின் சாதனை என்றும், சமூக நீதிக்கு சொந்தக்காரர்கள் அதிமுகவினர் தான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற அநீதியை, உண்மைக்கு புறம்பாக திருநாவுக்கரசு பேசியிருக்கிறார் என்றும்,
தேர்தல் ஆதாயத்திற்காக இப்படி உண்மைகளை மறைத்து அவர் பேசியிருப்பதாகவும், இது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். திருநாவுக்கரசு
அரசியலில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அதிமுகவுக்கு என்றென்றும் கடமைப்பட்டு
இருக்க வேண்டியவர் என்றும் ஜெயக்குமார் கூறினார். 1989 ஆம் ஆண்டு மார்ச் 26
ஆம் தேதி திருநாவுக்கரசு அளித்த பேட்டி, செய்தித்தாள்களில் வெளிவந்ததை
மேற்கோள் காட்டி அப்பொழுது என்ன நேர்ந்தது என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.
Discussion about this post