அதிமுகவிற்கு என தனி கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளது என்றும் அதிமுக எந்த காலத்திலும் யாருக்கும் கொத்தடிமையாக இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டிற்கான பணிகளை முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, காமராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், அதிமுகவிற்கு என தனி கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளது என்றும் அதிமுக நிமிர்ந்து நிற்கக் கூடிய இயக்கம் என்று பெருமையுடன் கூறினார். மேலும் அதிமுக எந்த காலத்திலும் யாருக்கும் கொத்தடிமையாக இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.