திமுக அமைச்சர்கள் அடிமை சாசனம் எழுதுகிறார்கள்.. ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் – பொதுச்செயலாளர் எழுச்சியுரை..!

பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு கோவைக்கு முதன்முதலாக பயணம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார். அதன் சாராம்சம் பின்வருவமாறு உள்ளது.

பொதுச்செயலாளரின் எழுச்சியுரை :

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கம்பெனியாக செயல்படுகிறது. வாரிசு அரசியல் செய்கிறது. திமுக அமைச்சர் ஒருவர் கருணாநிதியை ஏற்றோம் அவரது மகன் ஸ்டாலினையும் ஏற்றோம் அதேபோல உதயநிதியையும் ஏற்றோம் அவருக்கு பிறகு அவரது மகன் இன்பநிதியையும் ஏற்போம் என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்த அமைச்சர்களும் கருணாநிதி குடும்பத்திற்கு அடிமை சாசனம் எழுதிவிட்டார்கள். ஆனால் அதிமுக கழகத்தில் அப்படி கிடையாது. இங்கு சாதாராண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்.

பொன்மனச்செம்மல்  புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி  ஆகியோர்கள்தான் சாதாரண மக்கள் கூட உயர்ந்த நிலைக்கு வருவதற்கு காரணமாக இருந்த தலைவர்கள்.  நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள் அதிமுகவினர். ஆனால்  வீட்டு மக்களுக்கு உழைப்பது திமுக.  அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. ஆனால் 2 ஆண்டுகள் ஆக உள்ள திமுக ஆட்சியானது மக்களின் எதிர்ப்பை சந்திக்கிறது. அதிமுக ஊழல் என்று சொல்கிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு  பூச்சிமருந்து ஊழல் வீராண்ம் ஊழல் ஊழலிலே ஊறிப்போனக் கட்சி திமுக. நம்முடைய இயக்கம் சேவைக்கான இயக்கம், ஏழைமக்களுக்கான இயக்கம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாத் தேர்தலிலும் வெற்றி பெறும். பொம்மை முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார்.

பொய்வழக்கினை அதிமுக நிர்வாகிகள் மீது போடுவதுதான் அவரது வேலை. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து வைத்திருக்கிறது திமுக. கோவையில் உயர்மட்ட பாலங்கள் நிறைவேற்றியது அதிமுக. பத்து கிமீ உயர்மட்ட சாலை. கோவை நகரப்பகுதியில் சாலை தோண்டப்பட்ட கிடப்பில் இருக்கிறது., கோவை மெட்ரோவிற்கு அடித்தளம் போட்டவர் எஸ்பி வேலுமணி அவர்கள். அதற்கான விரிவான திட்ட அறிக்கையை நாம் கொண்டுவந்தோம். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அன்றைக்கு நம்மால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் ஸ்டாலின் அரசாங்கம் அதனை அவர்களின் திட்டம் என்று கூறி பொய் பேசி வருகிறது. தொழில் வளமிக்க மாவட்டமாக கோயமுத்தூர் மாறியதற்கு அதிமுகதான் காரணம். வரிகளை அதிகப்படுத்தி மக்களை தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு சுமையை கூட்டியதுதான் திமுகவின் சாதனை. இந்த ஆட்சியில் மக்கள் வேதனை பட்டதுதான் மிச்சம். ஒரு புதிய திட்டம் கூட கோவையில் திமுக செயல்படுத்தவில்லை. இங்கு ஆங்காங்கே முதலமைச்சர் தோன்றுவார் திரைப்பட நடிகர் போல. அதற்கு பினாமியாக ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் ஒரே ஆண்டில் இரு கட்சிக்குத் தாவியவர். மக்களே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெல்லும். கோவை அதிமுகவின் எஃகு கோட்டை. கொங்கு பகுதியின் 10 தொகுதியிலும் வெல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போது இருந்தே வேலை செய்ய தொண்டர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று கோட்டுக்கொள்கிறேன்.

Exit mobile version