அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்தின் மீதான வழக்கில் இன்று காலை 10:30 மணியளவில் தீர்ப்பானது வழங்கப்பட்டது. பன்னீர் தரப்பானது அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக மனு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தனர். அதனையடுத்து வழக்கானது விசாரிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கின் தீர்ப்பானது இன்றைக்கு வெளியானது. நீதிபதி குமரேஷ் பாபு இந்தத் தீர்ப்பினை வெளியிட்டார். அதிமுக பொதுக்குழுத் தீர்மானம் செல்லும் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று அவர் அதிரடி தீர்ப்பினை வழங்கினார். அதிமுக தொண்டர்களின் கனவான ஒற்றைத் தலைமை நினைவாகியது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி இன்னும் சில தினங்களில் பொறுப்பேற்க உள்ளார்.