அதிமுகவின் சின்னம், கொடி பொதுச்செயலாளருக்கே சொந்தம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவின் சின்னம், கொடி ஆகியவை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கே சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் சின்னம், கொடி ஆகியவை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கே சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இனிமேலும் கழகத்தின் சின்னம், கொடி முதலியவற்றை பன்னீர் பயன்படுத்தினால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்களே வாதாடி இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு ஜாமீன் தாரர்களாக இருந்திருக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் அந்த குற்றவாளிகளுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் தாரர்களாக இருந்த திமுக வழக்கறிஞர்கள், ஸ்டாலினை சந்தித்த புகைப்படமும் வெளிவந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.

விடியா திமுக அரசுக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பன்னீர் மீண்டும் கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.அதிகாரத்தின் பேரில் மிரட்டி பார்க்கும் திமுகவின் மாய வித்தைகளை கண்டு அதிமுக ஒருபோதும் அஞ்சாது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஆட்டூழியங்கள் அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்படும் என சூளுரைத்தார்.காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தால், குடித்துவிட்டா பணிக்கு செல்வார்கள்? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பின் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் மதுபானத்தில் கலப்படம் இருந்ததை அமைச்சர் முத்துசாமி ஒப்புக்கொள்கிறார் என விமர்சித்தார்.

Exit mobile version