நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மீட்டிங்! திமுக அரசை கண்டித்து போராட்டம் தொடர முடிவு!

மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசானது தமிழக மக்களையும் விவசாயப் பெருங்குடிகளையும் வஞ்சித்து வரும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் மற்றும் திமுகவை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக நாளை ஜூலை 5-ஆ,ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் கடந்த 21ம் தேதி மாநிலம் மூழ்வதும் ஆரப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக தொண்டர்படையினரே ஒன்று சேர்ந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தலமைக் கழக நிர்வாகிகள் கூட்டமானது நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆக்ஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ள மதுரை மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

அதிலும் முக்கியமாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேச்சிற்கு திமுக மவுனம் சாதித்து கண்டிக்காமலும் இருப்பதால் அதனைக் கண்டித்தும், பொராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

Exit mobile version