கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், கோவை மாநகரம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்று பரவுவதாகவும் கூறி பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், கோவை மாநகராட்சிக்குட்பட்ட குனியமுத்தூர் முதல் கோவை புதூர் வரை துர்நாற்றம் வீசுவதாகவும் இது தொடர்பாக மேயரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மேயர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Discussion about this post