அக்.7-ல் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி

சென்னையில் இன்று காலை தொடங்கிய அ.தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் பிற்பகல் 2.55 மணிக்கு முடிவடைந்தது. ஏறத்தாழ 5 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம், கட்சியின் தலைமை நிர்வாகிகள் வந்தவுடன் தொடங்கியது.

முதலில், நீட் தேர்வு விவகாரம், மொழிக் கொள்கை, மேகதாது அணை, ஜி.எஸ்.டி மற்றும் மானிய நிலுவைத்தொகை உள்பட பல பிரச்னைகள் தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசினர். அதையடுத்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செயற்குழுக் கூட்டத்தை நிறைவு செய்துவைத்தனர். 

அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்திதனர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி, முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பை அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

 

 

Exit mobile version