ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் மற்றும் தற்போதைய மாநிலங்களவை எம்பி சி வி சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடக்க உள்ள ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்து இருந்தார். 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈரோட்டில் இல்லாதவர்கள் வாக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தது. 7947 பேர் இறந்தவர்கள் வாக்கு பட்டியலில் பெயர் இருந்தது. 1009 பேர் இருமுறை பதிவு செய்யப்பட்டு இருந்தது .அது மட்டுமின்றி பல்வேறு முறைகேடுகள் பண பட்டுவாடா உள்ளிட்டவை நடப்பது குறித்து வழக்கு தொடர்ந்த நிலையில் இது குறித்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பின் இந்த வழக்கு திங்கள் கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. 20% ஓட்டு போலியாக சேர்த்து வைத்துள்ளனர். அது தொடர்ந்து நாங்கள் வழக்கு தாக்கல் செய்தோம் அதை திங்கள் கிழமை ஒத்தி வைத்துள்ளனர் என்று எம்பி சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.