அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், மோசடி குற்றச்சாட்டை சுமத்திய விவகாரம், சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக, வழக்குரைஞர் சர்மா என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறுகிய கால பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், பங்கு சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையை செயற்கையாக குறைத்தன என குறிப்பிட்டுள்ளார். குறுகிய கால பங்கு வர்த்தக நடவடிக்கையை சட்டத்துக்கு புறம்பானது என அறிவித்து, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிபுணர் குழுவை அமைக்க செபி தரப்பும், மத்திய அரசு தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிபுணர் குழு தொடர்பான விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் வழங்குமாறு தெரிவித்து, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post