நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளின் குழந்தைகளுக்கு என்னப் பெயர் தெரியுமா?

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படக் கூடிய நட்சத்திர ஜோடிகளாகும். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிறகு வாடகைத் தாய் மூலம் இருவரும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றனர். தற்போது நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். இவர்களின் பெயர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமானதாகவே உள்ளது.

அதன்படி ஒரு மகனுக்கு ‘உயிர் ருத்ரேனில் என் சிவன்’ என்றும் மற்றொரு பிள்ளைக்கு ‘உலக தெய்வேக் என் சிவன்’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர் இந்த நட்சத்திர ஜோடிகள்.

Exit mobile version