ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் காத்திருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

ரஜினியை கண்டதும் ரசிகர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ரசிகர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

Exit mobile version