திருப்பதி கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் பெற்றிருக்கும் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை வட பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சந்திரசேகர் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்து அமைப்பை சேர்ந்த நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சந்திரசேகருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி இன்று காலை விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு சென்று அவர் கையெழுத்திட்டார்.