கடந்த வருடம் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டது சமூக வலைதளங்களில் ஏற்கனவே வைரலானது . செல்போன் தட்டி விட்ட சம்பவம் குறித்து சிவகுமார் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டதுடன் அந்த ரசிகருக்கு புது செல்போனும் வாங்கி கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் இதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இயக்குநர் – எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் செல்ஃபி எடுத்த நபரின் மீண்டும் செல்போனைத் தட்டிவிட்டுள்ளார் நடிகர் சிவக்குமார். சமூக வலைதளங்களில் இது மீண்டும் வைரலாக வலம் வருகிறது.
Discussion about this post