நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி அவரது குடும்பத்தினர் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் குடும்பத்தினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்களும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, சிவாஜி கணேசன் இறந்து 18 ஆண்டுகள் ஆனாலும், அவர் நடித்த வசந்தமாளிகை திரைப்படம் இன்றளவிலும் நன்றாக ஓடி வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version