மறைந்தார் மனோபாலா.. தமிழ் திரையுலகிற்கு மற்றொரு பேரிழப்பு!

திரைப்பட தமிழ் திரைப்பட நடிகர் மனோபாலா 40 திரைப்படங்களுக்கு மேலும் 16 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 1994 இல் தாய்மண் 1995இல் தோழர் பாண்டியன் 1999இல் தாஜ்மஹால், மின்சார கண்ணா, சின்ன ராஜா, சேது, 2012 துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களிலும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தியுள்ளார். திரைப்பட நடிகர் மனோபாலா 1953 டிசம்பர் 8ஆம் தேதி கோயம்புத்தூர் சூலூரில் பிறந்தார் இவருக்கு தற்போது வயது 69 இவரது மனைவி உஷா. இவர் இறப்புக்கு தமிழ் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version