நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.
இலங்கை கண்டியில் மார்ச் 5ஆம் தேதி 1973 ஆண்டு ஜே.கே.ரித்தீஷ் பிறந்தார். ராமநாதபுரத்தில் வசித்து வந்த இவர், பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு ராமநாதபுரம் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜே.கே. ரித்தீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர்.
சின்னபுள்ள திரைப்படத்தின் முலம் அறிமுகமான ஜே.கே. ரித்தீஷ், 2007ம் ஆண்டு கானல் நீர் திறப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இதைத்தொடர்ந்து நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் ஜே.கே.ரித்தீஷ் நடித்துள்ளார். அண்மையில் வெளியான எல்கேஜி படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார்.