மக்களவை தேர்தல் சமயத்தில் சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுக்க உயர்மட்டக்குழு அமைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2019 மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 23 தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் விதமாக உயர் மட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ள குழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
இதில் மத்திய நேரடி வரிகள் துறை அதிகாரி, மறைமுக வரிகள் துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு துறை இயக்குனர், மத்திய பொருளாதார குற்ற புலனாய்வுத்துறை, நிதி புலனாய்வுத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மேலும் அனைத்து உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
வங்கி மூலமாக அதிக பணம் டெபாசிட் செய்வதை கண்காணிக்க மூத்த வங்கி அதிகாகரிகள் கொண்ட குழுவும் இந்த உயர்மட்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர்.