காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ரகுபதி, தனக்கு சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி மூப்பு அடிப்படையிலேயே ஒதுக்கீடு நடப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, வீடுகள் ஒதுக்கீடு தொடர்பாக 2 வாரங்களில் இணையதளம் உருவாக்கி, பணி மூப்பின் அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்ய டிஜிபிக்கு, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அடையாளம் காணும் வகையில், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கவும், டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post