சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 3ஆம் தேதி ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சி.டி. மணி ஆகியோரின் கார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. சம்பவம் தொடர்பாக 7 பேரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்தில் சதீஷ் என்பவர் சரணடைந்துள்ளார். வழக்கு தொடர்பாக சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை தேனாம்பேட்டை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Discussion about this post