அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மின்னஞ்சலில் புகார்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த வாரம் விசாரணையை தொடங்கிய இந்த குழு, சூரப்பா மீது புகார் தெரிவிக்க விரும்புவர்கள், மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தது. அதே போல, விசாரணை ஆணையத்திற்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், சூரப்பா மீது மின்னஞ்சலில் புகார்கள் வந்துள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது. அந்த மின்னஞ்சல் புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அதில், முகாந்திரம் இருந்தால் புகார் அளித்தவர்களை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்கப்படும் என்றும் விசாரணை குழு கூறியுள்ளது. அது தொடர்பான ஆதாரங்களையும், புகார்தாரர்களிடமிருந்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post