அபுதாபியில் கட்டப்படவுள்ள முதல் இந்து கோவில்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்!

abudhabi hindu temple

அபுதாபியில் கட்டப்படவுள்ள முதல் இந்து கோயிலின் இடத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார். 3 நாள் பயணமாக வளைகுடா நாட்டிற்கு சென்ற அமைச்சர் ஜெய்சங்கர் அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோயிலின் இடத்தைப் பார்வையிட்டார். மேலும் கோயிலைக் கட்டுவதில் இந்தியர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.

இந்த கற்கோயிலானது சுமார் 55 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படும் எனவும் இந்திய கோயில் கைவினைஞர்களால் பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version