சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல், கரூர் மாவட்டத்தில் ஏழு ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமுகவில் இருந்து விலகி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கிருஷ்ணராயபுரம் அதிமுக ஒன்றிய செயலாளர் சேவகர் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
Discussion about this post