தஞ்சையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், அமமுக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர் ஜவஹர் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post