ஆவின் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை

ஆவின் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் சென்னையில் எந்த பாதிப்பும் இல்லை என ஆவின் பால் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆவின் பால் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் லாரிகளை இயக்கிவரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வேலை நிறுத்தத்தால் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து, 129 டேங்கர் லாரிகள் மூலம் 14 லட்சம் லிட்டர் பால் வந்துள்ளதாகவும், நாளை மதியம் வரை தேவையான அளவில் பால் இருப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version