பல பஞ்சாயத்துகளால், ஏற்கனவே ஆவினின் டப்பா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, தற்போது, வேலூர் மாவட்ட ஆவினில் விஞ்ஞான ஊழல் செய்து அசத்தியிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.. விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்களான திமுகவின் தில்லாலங்கடியை தோலுரிக்கிறது இந்த தொகுப்பு…
எத்தனையோ தமிழ் சினிமாக்களில், ஓரே மாதிரி இருக்கும் இரட்டையர்களால் ஏற்படும் குழப்பங்கள் தான் கதைக்கருவாக இருக்கும்.. அப்படிப்பட்ட படத்தைப்பார்த்து இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.. அதன் பலன்தான் ஒரே நம்பர் ப்ளேட் வைத்த 2 டெம்போக்களை வைத்து ஆவினில் விஞ்ஞான ஊழல் செய்திருக்கிறார்.. அடடே .. இதுவல்லவோ திறமை…
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் விநியோகத்துக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அப்படி திமிரி வழித்தடத்திலும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் சரக்கு வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறது. இதில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு சரக்கு வாகனங்கள் மூலம் பால் பாக்கெட்டுகளை திருடிச்சென்றது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
TN23AC 1352 என்னும் பதிவெண்ணில் இரண்டு சரக்கு வாகனங்கள் ஆவினில் இருந்து முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றுள்ளது. தினமும் 2500 லிட்டர் பால்பாக்கெட் இந்த வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல நாட்களாக அரங்கேறியுள்ள இந்த திருட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளதற்கு பிறது இப்போதுதான் இது தொடர்பாக விசாரணையே நடந்து வருகிறது. ஏற்கனவே தில்லாலங்கடி செய்ததால் தான் ஆவின் அமைச்சராக இருந்த ஆவடி நாசரை வெளியேற்றியது திமுக அரசு.. இப்போது இந்த திருட்டு சம்பவமும் அரங்கேறியிருப்பது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அப்பகுதியினர்.
ஒரு நாளைக்கு 2500 லிட்டர் பால் என்றால், எத்தனை நாள் இந்த திருட்டு நடந்திருக்கும்? அப்படியானால் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும்? துறைக்கு பொறுப்பேற்று இன்னும் 1 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் இவ்வளவு பஞ்சாயத்து … இந்த விடியா ஆட்சியில் யாரை பால்வளத்துறை அமைச்சராக்கினாலும், ஆவினுக்கு பால் ஊற்றுவதுதான் அவர்களுடைய ஒரே டார்கெட் என்கிறார்கள் விடியா அரசின் திறமையை அறிந்தவர்கள்..