ஊருக்கே பால் ஊத்துற நிறுவனத்துக்கு..பால் ஊத்துறலதுதான் திமுக ஸ்பெஷலிஸ்ட்டே!

“ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு”

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் கடந்த 2022ல் மூன்று முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது. குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் அதன் விற்பனை விலை மீண்டும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு அதன் விலை உயர்வானது இன்று (25.07.2023) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு வெறும் 3.00ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில் பால் பொருட்களின் விற்பனை விலை மட்டும் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் விரோத செயலாகும். எனவே மக்கள் நலன் கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் எனவும், பால் கொள்முதல் உயர்வுக்கேற்ற வகையில் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

Exit mobile version