ஆவின் நிறுவனம் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக அதிகளவாக 12.95 லட்சம் லிட்டர் பால் விற்பனையை எட்டி சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம், அதிகபட்சமாக மார்ச் 4 ஆம் தேதி சென்னையில் 12.95 லட்சம் லிட்டரும், கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இதர மாவட்டங்களில் 11.37 லட்சம் லிட்டரும் என மொத்தம் 24.32 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஒத்துழைப்பு நல்கிய தமிழக அரசுக்கும், பால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.