அனைத்து ஆவின் பால் வகைகளின் விலைகளும் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதாலும் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அனைத்து ஆவின் பால் வகைகளின் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் நிறுவனங்களை ஒப்பிடும்போது இது விலை குறைவாகவே உள்ளது.

தமிழ்நாடு பாலுற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பில் ஆவின் என்னும் பெயரில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பால் கொள்முதல் விலை, பதப்படுத்தும் செலவு, எரிபொருள் விலை, வாகனப் போக்குவரத்துச் செலவு, அலுவலகச் செலவு ஆகியவற்றின் உயர்வாலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அனைத்து வகைப் பால் விலையும் திங்கட்கிழமை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் ஆவின் நைஸ் பாலின் விலை இனி அரைலிட்டர் 21 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 43 ரூபாய்க்கும் விற்கப்படும். ஆவின் கிரீன் மேஜிக் அரைலிட்டர் பொட்டலம் 23 ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்கப்படும். ஆவின் பிரீமியம் அரை லிட்டர் 25 ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்கப்படும்.

தமிழகத்தில் முன்னணி தனியார் நிறுவனங்களின் விலையை ஒப்பிடும்போது இது குறைவானதே ஆகும். அதேபோலக் கேரளாவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான மில்மா, கர்நாடகப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான நந்தினி ஆகியவற்றின் பால் விலையை ஒப்பிடும் போதும் இது குறைவானதே ஆகும்.

ஊர்ப்புறத்தின் பால் உற்பத்தியாளர்களுக்கான பணப்பட்டுவாடா பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், நுகர்வோருக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தவும் இந்த விலை உயர்வு என ஆவின் நிறுவனம் தெரிவித

Exit mobile version