ஆவினால் அழியப் போகுதா விடியா திமுக!
பால்வளத்துறையை எடுத்துக்கொண்டால், என்றைக்கு திமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமைந்ததோ, அப்போதே குட்டிச்சுவராகிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் குற்றச்சாட்டாக சொல்லி வருகின்றனர். ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடத்தியதாக ஏற்கனவே முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கினார் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின். ஆனால் இன்றுவரை செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து இறக்காமல் இருப்பது என்ன கணக்கு என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். சரி தற்போதைய கதைக்கு வருவோம். ஏற்கனவே கடந்த திங்களன்று சொல்லாமல் கொள்ளாமல் எந்தவித அறிவிப்பு இன்றியும் ஆவினில் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் தயிர் விலை அதிகரித்திருந்தது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஆவடி நாசரைத் தூக்கிவிட்டு முத்துச்சாமியை பால்வளத்துறை அமைச்சராக மாற்றியதற்கு இதுதான் காரணமா? என்று பலதரப்புகளிடம் இருந்து கேள்விகள் எழத்தொடங்கிவிட்டது. ஆவின் பால் நிறுவனத்தால் தான் திமுக அரசுக்கு கண்டம் என்றும் வெளியில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். தற்போது அதற்கு மேலும் வலுசேர்க்க ஒரு சம்பவத்தை இந்த விடியா திமுக அரசு செய்துள்ளது.
அரை லிட்டர் பால் பாக்கெட் எடை குறைவாக விநியோகம்!
ஆவின் நிறுவனம் இன்று வினியோகித்த அரை லிட்டர் பால் பாக்கெட் எடை குறைவாக விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரை லிட்டர் பாலில் 500 கிராம் முதல் 520 கிராம் வரையில் இருப்பதற்கு பதிலாக 470 கிராம் அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அரை லிட்டர் பச்சை நிற ஆவின் பால் அரை லிட்டருக்கு குறைவாக உள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 500 கிராம் கொள்ளளவில் இருக்க வேண்டிய ஆவின் பால் பாக்கெட்டுகள் 470 கிராம் வரையில் குறைந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் எடை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.