ஆவின்ல முறைகேடு செஞ்சவங்கள தண்டிக்காம அவங்க கேட்ட பணியிடங்களுக்கு மாறுதல் வழங்குறதாவும், அவங்களுக்கு பதவி உயர்வே வழங்க ஆவின் நிர்வாகம் துடிக்கிறதாவும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்குது…
ஆவினோட தென்சென்னை விற்பனை பிரிவு பொதுமேலாளரா இருந்த ரமேஷ்குமார், தென்சென்னை உதவி பொது மேளாளர் சிவக்குமார், நிர்வாக இயக்குநர் காமராஜ் மேலே ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும், துறைரீதியா அவங்க மேல நடவடிக்கை எடுக்கலையாம்… ரமேஷ்குமார விழுப்புரம் பொதுமேலாளராத்தான் ராஜமரியாதையா மாத்தியிருக்காங்க… அங்கேயும் ஊழல்ல ஈடுபட்டவர இப்போ, காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட ஒன்றிய பொதுமேலாளரா போட, இங்கேயும் கைவண்ணம் காட்டிட்டு வர்றதா புகார் சொல்றாங்க.
அதே மாதிரி உதவி பொதுமேலாளர் சிவக்குமார திருச்சிக்கு மாத்தியும், தன்னோட செல்வாக்கப் பயன்படுத்தி பழையபடியும் அதே பணியிடத்துக்கு வந்துட்டாராம்.. அதுமட்டுமில்லாம, நிர்வாக உத்தரவ மீறி ஆவின் நெய் மொத்த விநியோகஸ்தர் ஒருத்தருக்கு 7 கோடி ரூபாய்க்கு ஆவின் நெய்ய கொடுத்துருக்காராம்.. இந்த மாதிரி ஆவின்ல பல தில்லாலங்கடி வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கிறதா பால் முகவர்கள் சங்கமும் குற்றச்சாட்ட எழுப்பி இருக்காங்க.. இப்படி எத்தனையோ புகார்களும் குற்றச்சாட்டுகளும் சொல்லப்பட்டாலும் இந்த மாதிரி அதிகாரிங்ககிட்டேயிருந்து ஆவின் அமைச்சருக்கும், திமுக அதிகார மையங்களுக்கும் போகவேண்டியது போறதாலதான் எந்த மாற்றமும் இல்லாம இருக்குதோன்னு நாங்க சொல்லல.. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
Discussion about this post