எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது .2016-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை அளித்த இருதய நோய் தடுப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோ நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என்றும் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.
ஆவணங்களை 23-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.