ஆடி அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளில் புனித நீராடி, விரதம் இருந்து வழிபாடு நடத்தினால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். முன்னோர்கள் நினைவாக ஆடி அமாவாசை தினத்தன்று திதி தர்ப்பணம் செய்தால், இறந்தவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி, ஆடி அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் காலை முதல் ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் கடற்கரை, காவிரி, பவானி ஆறுகளிலும் பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். குற்றாலத்திலும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு நடத்து வருகின்றனர். இதேபோன்று, கன்னியாகுமரி, வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் ஏராளமான பக்தர்கள், ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி வருகின்றனர்.
Discussion about this post