செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைக்க தவறினால், பான் கார்டு காலாவதியாகும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதை கண்காணிக்க ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்தது.
கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டும், இன்னும் பலர் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க தவறினர். இதனால், வரும் செப்டம்பர் மாதம் 30ந் தேதிக்குள் அனைவரும் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணைக்க தவறினால், இணைக்கப்படாத பான் கார்டு காலாவதியாகிவிடும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை ஒருங்கிணைப்பதற்கு ஆதாருடன் பான் கார்டு கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்பதால், இம்முறை காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post