நக்சல் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த கந்தர்பதாஸ் என்பவர் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் கட்டப்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். அதே மருத்துவமனையில் தலைமைபாதுகாப்பு அதிகாரியாக, ஒய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் ராமதாஸ் பணிபுரிகிறார். அவர், யூடியூபில் மேற்குவங்கத்தில் சிலிகுரி கிராமத்தில் 4 நக்சல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட வீடியோவை பார்த்து, அதில் உள்ள ஒரு நபர் மருத்துவமனையில் பணிபுரியும் கந்தர்பதாஸ் போலிருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது சம்பந்தமாக கியூ பிராஞ்ச் பிரிவு போலீசார், கந்தர்பதாஸை அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்தர்பதாஸ் வேலை செய்துவந்த மருத்துவமனை வளாகத்தை, அடுத்த வாரம் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Discussion about this post