சென்னை விமான நிலையத்தில் வெகு நேரமாக இருந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு நிலவியது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை இருந்து வந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு கடந்த சில நாட்களாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் ஆயுதப்படை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செடி மற்றும் புதர் போன்ற இடங்களில் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் எண் நுழைவாயில் அருகே வெகு நேரமாக மர்ம சூட்கேஸ் ஒன்று இருப்பதைக் கண்டு, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி கொண்டு சோதனை நடத்தப்பட்டதில், எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள், சூட்கேஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Discussion about this post