கன்னியாகுமரியில் எஸ்.ஐ வில்சனின் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட நபரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ.வில்சனை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே ஹல் அந்த் அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கைதான மூன்று பேர் அளித்த தகவலின் பேரில், கொலையில் மூளையாக செயல்பட்ட ஹல் அந்த் அமைப்பின் முக்கிய தலைவரான மெகபூபா ஷா என்பவரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது. ஹல் ஹந்த் இயக்கத்தின் பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற இடங்களின் தலைவனாக மெகபூபா ஷா செயல்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.