தமிழகத்தில் மழை வேண்டி மாவட்டங்கள் தோறும் யாகங்கள் நடத்துமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
பருவமழை பொய்த்து போனதால் தமிழகம் வறட்சியை எதிர்கொண்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. இருப்பினும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், விவசாய கிணறுகள், கல்குவாரிகளிருந்து நீர் எடுத்து அதனை சுத்திகரித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக மக்களின் நலனுக்காகவும், வறட்சியை போக்கவும், மழை வேண்டி மாவட்டங்கள் தோறும் யாகம் நடத்துமாறு அதிமுக நிர்வாகிகளை கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் யாகங்களில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. சிறப்பு பூஜை, அன்னதானம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.