வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் குறித்து இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும் , நாளையும் நடைப்பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைப்பெறும் இந்த சிறப்பு முகாம்களில் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிகளுக்குள்ளே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை அளிக்கும் வகையில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் இன்று 3 ஆயிரத்து 754 வாக்கு சாவடிகளில் இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.