மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் முடியும் நிலையில் ,மக்கள் ஆர்வமுடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்களிப்பதன் முக்கியதுவத்தை உணர்ந்த மக்கள் தங்களின் அன்றாட வேலைகளை ஒதுக்கிவிட்டு காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.பீகாரில் தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள் வாக்களிக்க முன்வந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.
தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் சபா மற்றும் ஃபராஹ் இன்று பீகார் மக்களவை தொகுதி பாட்னாவில் வாக்களித்துள்ளனர்.தலையோடு தலையாக ஒட்டிப்பிறந்த சகோதரிகள் தனித்தனி வாக்காளர் அடையாள அட்டை மூலம் வாக்களிப்பது இதுவே முதல்முறையாகும்.