பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வடகிழக்கு பருவமழையால் வீடுகள் சேதமடைந்த 59 பேருக்கு நிதியுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தேசிய பேரிடர் நிதியை எதிர்பார்க்காமல் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனக் கூறிய அமைச்சர், பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என விமர்சனம் செய்தார். மேலும், திமுக எம்.பி. ஆ.ராசா பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் என்றும், அவரின் கருத்துக்களை மக்கள் நிச்சயமாக ஏற்க மாட்டார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Discussion about this post