நீலகிரியில் ஓட்டு சேகரிக்க சென்ற ஆ.ராசா, தொண்டர் ஒருவரை தூக்கி வெளியே போடுவேன் என பேசியது முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் திமுக வேட்பாளர் ஆ. ராசா பிரசாரம் செய்தார். ஆனால் அவர் குறித்த நேரத்திற்கு வராததால் காத்திருந்த பெண்கள் பாதியிலேயே கலைந்து சென்றனர். மேலும் கூட்டத்தில் சிறுவர்,சிறுமியரை வரவழைத்து, அவர்களை கடும் வெயிலில் ஆட வைத்தனர்.
இந்த நிலையில் தாமதமாக வந்த ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் வந்தவர்களை பார்த்து, அமைதியாக இருங்கள் இல்லையென்றால் நானே இழுத்து வெளியே போடச்சொல்லுவேன் என கோபத்தோடு பேசினார். இவரின் இந்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.