ஆ.ராசாவின் மொத்த சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரிப்பு

திமுகவின் மக்களவை தொகுதி வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 75 சதவீதம் கூடியிருப்பது தற்போது அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பில் தெரியவந்துள்ளது.

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளர். இந்நிலையில் வேட்புமனு தாக்கலின் போது தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் இதே நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அவர், அப்போது தாக்கல் செய்த சொத்து மதிப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரது தற்போதைய சொத்து மதிப்பானது 75 சதவீதம் கூடியிருப்பது தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்ததில், ஆ.ராசா பெயரில் அசையும் சொத்துக்கள், ஒரு கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து, 709 ரூபாய் என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு 14 லட்சத்து 87 ஆயிரத்து 419 ரூபாய் என்றும், குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள், 93 லட்சத்து 93 ஆயிரத்து 597 ரூபாயும், அசையா சொத்துக்கள் 14 லட்சத்து 12 ஆயிரத்து 975 ரூபாயாகவும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஆ.ராசாவின் மகள் பெயரில் 18 லட்சத்து 15 ஆயிரத்து 400 ரூபாய் அசையும் சொத்துக்களாகவும், இருந்துள்ளது. மேலும், அசையும் பரம்பரை சொத்துகளாக 41 லட்சத்து 3 ஆயிரத்து 540 ரூபாயும், அசையா பரம்பரை சொத்துகளாக 14 லட்சத்து 53 ஆயிரத்து 875 ரூபாய் என மொத்தம் 3 கோடியே 75 லட்சத்து 42 ஆயிரத்து 880 கோடி என குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version