தர்பார் ரிலீஸ் : டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த தனியார் நிறுவனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,நயன்தாரா நடித்துள்ள தர்பார் படம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக சென்று படத்திற்கான டிக்கெட்டுகளை ஆர்வமாக வாங்கி வருகின்றனர்.பொங்கலையொட்டி தர்பார் படம் வெளிவருவதால் ‘ தர்பார் பொங்கல் ‘ என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தர்பார் படம் ரிலீஸ் ஆவதையொட்டி தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி ‘தர்பார்’ திரைப்படத்தை பார்ப்பதற்காக 9ஆம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்றும், அது மட்டுமின்றி அந்த படத்திற்கான டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார் .

 

 

இந்த அறிவிப்பால்  அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version