கேரளா கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் தனது மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணு, திருமண நிகழ்ச்சியில் ஒரு பாடல் பாடிக் கொண்டிருந்தபோது மரணமடைந்தார். பாடல் பாடியபடியே கீழே விழுந்து விஷ்ணு மரணமடையும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தந்தையின் மரணத்தை தெரிவிக்காமல், மகளின் திருமணத்தை உறவினர்கள் நடத்தி முடித்தனர். இந்தநிலையில், மரணமடைந்த காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணுவின் இறுதிச்சடங்களில் போலீசார் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினார்.
Discussion about this post