சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்காக சுமார் 5 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியிருந்தார். இந்தநிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வாக்குச்சாவடிகள் நிலை குறித்து அறிக்கை பெற்றுள்ளார். இதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து 5 ஆயிரத்து 800 வாக்குசாவடிகள் அமைக்கவுள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலை பொருத்தவரை மக்களவைத் தேர்தலுக்கான சென்னை வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு புதிய வாக்காளர்களையும் இணைக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.
Discussion about this post