ஓமனில் இருந்து தமிழகம் வந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நபருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தனி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறிய அமைச்சர், கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து தீவிரம் காட்டி வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.